தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரயிலில் அபாயச் சங்கிலியை இழுத்தால் அபராதம்! - passenger

கன்னியாகுமரி: திருவனந்தபுரம் கோட்டத்தில் தேவையின்றி அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், முறையான காரணங்களின்றி இழுத்து நிறுத்தினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே பாதுகாப்புப் படையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அபராதம்

By

Published : Jul 17, 2019, 5:23 PM IST

திருவனந்தபுரம் கோட்டத்தில் இந்த ஆண்டில் கடந்த ஜூன் மாதம் வரை, அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியதற்காக 293 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பான்மையானவை முறையான காரணம் இல்லாமல் அபாயச் சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.

இதே திருவனந்தபுரம் கோட்டத்தில் 2018ஆம் ஆண்டு ரயிலில் அபாயச் சங்கிலியை பிடித்து இழுத்தவர்களில் மொத்தம் 275 பேரிடமிருந்து ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 900 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

தேவையில்லாமல் ரயிலில் அபாயச் சங்கிலியை இழுத்தால் அபராதம்

ரயில்களில் அபாயச் சங்கிலியை பிடித்து இழுப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே முறையான காரணங்களின்றி ரயிலில் அபாயச் சங்கிலியை பிடித்து இழுத்து நிறுத்தினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே பாதுகாப்புப் படையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details