தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் முடிந்தது...கேரளாவில் பயணத்தை தொடங்கிய ராகுல் காந்தி... - மீனவ பிரதிநிதிகள் ராகுல் காந்தியை சந்தித்தனர்

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் ஒன்றுமை நடைபயணம் தமிழ்நாட்டில் நேற்றுடன் முடிவடைந்தது. அதைத்தொடர்ந்து கேரளாவில் தொடங்கினார்.

Etv Bharatராகுல் காந்தியின் நான்காம் நாள் பாதயாத்திரை கேரள- தமிழக எல்லையில் நிறைவு
Etv Bharatராகுல் காந்தியின் நான்காம் நாள் பாதயாத்திரை கேரள- தமிழக எல்லையில் நிறைவு

By

Published : Sep 11, 2022, 9:13 AM IST

கன்னியாகுமரி:காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி ''பாரத் ஜோடோ யாத்ரா'' என்ற இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நடைப்பயணத்தை கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபம் முன்பு இருந்து தொடங்கினார். அதைத்தொடர்ந்து, அகஸ்தீஸ்வரம், நாகர்கோவில், முளகுமூடு வழியாக சென்று கேரள எல்லையான களியக்காவிளை அருகே 4ஆவது நாள் நடைபயணத்தை முடித்தார்.

அந்த வகையில் இன்று(செப். 11) முதல் கேரளா மாநிலத்தில் பயணத்தை தொடங்கினார். இதனிடையே கன்னியாகுமரி மீனவர்களிடம் உரையாடினார். அப்போது மீனவர்கள், மீன் வள மசோதா குறித்து மீனவ பிரதிநிதிகளுடன் கருத்து கேட்க வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களை மீன் பிடிக்க அனுமதிக்க கூடாது. மீனவர்கள் மீது போடப்பட்டுள்ளன வழக்குகள் ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்தனர்.

அதன் பின் ராகுல் மாற்றுத்திறனாளிகளை சந்தித்து கலந்துரையாடினர். அப்போது அவர்கள் மாற்று திறனாளிகளுக்கு உள்ளாட்சி தேர்தலில் இட ஒதுக்கீடு, தனி ஆணையம் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்தனர். 4ஆவது நாள் பயண முடிவில் ராகுல் தமிழ்நாடு-கேரள எல்லையான தளச்சான் விளை சென்றடைந்ததும், "இந்த பயணத்தில் ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் நன்றி. இந்தியா சாதி, மத, மொழி அடிப்படையில் பிளவுபட்டுள்ளது. குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே பாஜக நன்மை செய்திறது. ஊடகங்களையும் கையில் எடுத்து பயன்படுத்தி வருகிறது. இதற்கு முற்று புள்ளி வைக்கவே இந்த பயணம். பெரியார் மண்ணில் இருந்து வருத்தத்துடன் பிரிந்து செல்கிறேன் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:4ஆவது நாள் நடைப்பயணத்தை தொடங்கினார் ராகுல் காந்தி

ABOUT THE AUTHOR

...view details