குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட தென் மாவட்டங்களில் அய்யாவழி பக்தர்கள் பெருமளவில் உள்ளனர். இதனால் தேர்தல் நேரங்களில் இவர்களின் ஆதரவைப் பெற காட்சிகள் போட்டாபோட்டி போட்டு வருகின்றனர்.
ராகுல் பிரதமராக பதவியேற்பார்: அடிகளார் பாலபிரஜாபதி ஆசீர்வாதம்! - ராகுல் பிதமர் ஆவார்
கன்னியாகுமரி : மக்களவைத் தேர்தலில் இந்தியா முழுவதும் காங்கிரஸ் வெற்றிபெற்று அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பிரதமராக பதவியேற்பார் என பாலபிரஜாபதி அடிகளார் ஆசீர்வாதம் வழங்கியுள்ளார்.
இந்நிலையில், அகில இந்தியக் காங்கிரஸ் செயலாளரும் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளருமான சஞ்சய் தத் இன்று கன்னியாகுமரி மாவட்டம், சுவாமி தோப்பிலுள்ள அன்புவனத்திற்கு வந்து பாலபிரஜாபதி அடிகளாரைச் சந்தித்து காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தரும்படி கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து, பாலபிரஜாபதி அடிகளார் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தருவதாக உறுதியளித்து, இந்த முறை தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ராகுல் காந்தி நாட்டின் பிரதமராகப் பதவியேற்பார் என்று ஆசி வழங்கினார். அப்போது, சஞ்சை தத்துடன் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரின் மகன் நடிகர் விஜய் வசந்த், உள்ளிட பலர் உடனிருந்தனர்.