கடந்த இரண்டு நாட்களாக தமிழக தன் மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இன்று குமரி மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரி சர்ச் ரோட்டில் கூடியிருந்த மக்களிடையே உரையாற்றிய பின், அங்கிருந்து அகஸ்தீஸ்வரத்தில் உள்ள மறைந்த காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாரின் நினைவிடத்திற்கு சென்ற ராகுல், அங்கு அஞ்சலி செலுத்தி மணி மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
பனை நுங்கை ருசித்து சாப்பிட்ட ராகுல் காந்தி! - ராகுல்காந்தி
கன்னியாகுமரி: தேர்தல் பிரச்சாரப் பயண இடைவெளியில் சாலையோரத்தில் பனை நுங்கை விலைக்கு வாங்கி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ருசித்து சாப்பிட்டார்.
![பனை நுங்கை ருசித்து சாப்பிட்ட ராகுல் காந்தி! rahul](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10821494-493-10821494-1614583551151.jpg)
rahul
பின்னர், அங்கிருந்து புறப்பட்ட அவர், கொட்டாரத்தை அடுத்துள்ள மந்தாரம்புதூரில் சாலையோரம் பெண்கள் விற்றுக் கொண்டிருந்த பனை நுங்கினை வாங்கி ருசித்து சாப்பிட்டார்.
பனை நுங்கை ருசித்து சாப்பிட்ட ராகுல் காந்தி!
அதனைத் தொடர்ந்து, அப்பெண் நுங்கு வியாபாரியிடம் ரூ.500 பணத்தைக் கொடுத்த ராகுல், பனை நுங்கு மிகவும் சுவையாக இருந்ததாகக் கூறினார். பின்னர் தேர்தல் பிரச்சாரத்திற்காக ராகுல் நாகர்கோவில் புறப்பட்டுச் சென்றார்.