கன்னியாகுமரி: காங்கிரஸ் கட்சி எம்.பி. ராகுல்காந்தி ''பாரத் ஜோடோ யாத்ரா'' என்ற இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரியில் காந்தி மண்டபம் முன்பு இருந்து தொடங்கினார். நேற்றிரவு மூன்றாம் நாள் பயணத்தை முடித்து முளகுமூட்டில் தங்கினார். அதன் பின் இன்று (செப் 10) நான்காவது நாள் பயணத்தை தொடங்கினார். இந்த பயணம் முளகுமூடு புனித மேரிஸ் ICI பள்ளியில் இருந்து கேரள எல்லையான களியக்காவிளை வரையில் செல்கிறது. இதனிடையே மார்த்தாண்டம் நேசமணி கிறிஸ்தவ கல்லூரியில் ராகுல் காந்தி ஓய்வெடுத்து மதிய உணவுக்கு பிறகு அங்கிருந்து மாலை 3 மணிக்கு மீண்டும் பயணத்தை தொடங்குகிறார்.
4ஆவது நாள் நடைப்பயணத்தை தொடங்கினார் ராகுல் காந்தி - ராகுல்காந்தி
இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் 4ஆவது நாள் பயணத்தை முளகுமூட்டில் இருந்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தொடங்கினார்.
இந்திய ஒற்றுமை பாதை யாத்திரையை 4 வது நாளாக துவங்கினார் ராகுல்காந்தி
அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்றுடன் ராகுல் பயணம் முடிகிறது. நாளை முதல் கேரளா மாநிலத்தில் இருந்து பயணத்தை தொடங்குகிறார். காலையில் தொடங்கிய நடைப்பயணத்தின்போது மருதூர்குறிச்சி அருகே 60 வயது முதியவர் ஜெஸ்டின் என்னும் சிலம்பாட்ட வீரர் சிலம்பாட்டம் ஆடி அசத்தியதை ராகுல் கண்டுகளித்தார்.
இதையும் படிங்க:ஒரு மேடையில் 80 விழுக்காடு... மற்றொரு மேடையில் 70 விழுக்காடு... முதலமைச்சர் மீது சீமான் விமர்சனம்...