கன்னியாகுமரி:இந்திய ஒற்றுமை பாதயாத்திரையில் இரண்டாவது நாளாக கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் நோக்கி பாதயாத்திரையில் சாலையில் நடந்து வரும் பொழுது ராகுல் காந்தியிடம் 2017 ஆண் ஆண்டில் நீட் தேர்வால் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி அனிதாவின் குடும்பத்தார் அவரை சந்தித்தனர். அவர்களிடம் ராகுல் காந்தி, தன்னுடைய அனுதாபத்தைத் தெரிவித்துக்கொண்டார்.
காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு தழுவிய அளவில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 150 நாட்கள் 3500 கிலோமீட்டர் இந்திய ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையில் ‘பாரத் ஜோடோ யாத்ரா’ எனும் பாதயாத்திரை நேற்று(செப்.7) தொடங்கியது. இரண்டாவது நாளாக இன்று(செப்.8) கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் வரும் சாலையில் பொத்தையடி என்ற இடத்தில் நடந்து வரும் போது ராகுல் காந்தியிடம் வந்து 2017 ஆம் ஆண்டு நீட் தேர்வில் தன் உயிரே மாய்த்துக் கொண்ட மாணவி அனிதாவின் குடும்பத்தார் சந்தித்தனர்.