காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடந்த 1ஆம் தேதி குமரி மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அங்கு முளகுமூடு பகுதியில் சென்றபோது சிறுவர்கள் சிலர் அவருக்கு வரவேற்பு அளித்தனர். அப்போது அங்கு காரைவிட்டு இறங்கிய ராகுல் காந்தி அங்கிருந்த ஒரு சிறுவனிடம் பேசினார்.
அப்போது அந்தச் சிறுவன் தனது பெயர் ஆண்டனி ஃபெலிக்ஸ் எனவும் தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்துவருவதாகவும் தெரிவித்தார். மேலும் தனக்கு ரன்னிங்கில் அதிக ஆர்வம் உள்ளதாகவும், பயிற்சியாளர்கள் இருந்தால் தன்னால் வெற்றிபெற முடியும் எனவும் ராகுல் காந்தியிடம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி, சிறுவனுக்குப் பயிற்சியாளர் ஏற்பாடு செய்து தருவதுடன் ரன்னிங் ஷூ வாங்கித் தருவதாக உறுதியளித்தார்.