தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விவசாயிகளுக்காக என் சொத்துகளை விற்கத் தயார்!  பொன். ராதா அதிரடி - பொன். ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி: தன் சொத்தை விற்று விவசாயிகளின் கடன்களை அடைக்க உள்ளதாக முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ponnar

By

Published : Jun 17, 2019, 12:20 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் முட்டைக்காட்டில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார். தேர்தலில் தனக்காக உழைத்த கூட்டணி கட்சி, கட்சித் தொண்டர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

அப்போது, எனது சொத்தை விற்றாவது விவசாயிகளின் கடனை அடைக்கத் தயார் என அதிரடியாக தெரிவித்தார்.

முன்னதாக சில நாட்களுக்கு முன்பு பொன். ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டில் வெற்றிபெற்ற மக்களவை வேட்பாளர்கள் தங்களது சொத்துகளை விற்று விவசாயிகளின் கடன்களை அடைக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

அதற்கு திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர், நீங்கள் உங்கள் சொத்தை விவாசாயிகளின் கடனை முதலில் அடையுங்கள் என பதிலளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


பொன். ராதாகிருஷ்ணன்

ABOUT THE AUTHOR

...view details