தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திடீரென மாற்றப்பட்ட பராமரிப்பு கோட்ட அலுவலகம்.. பொதுப்பணித்துறை ஊழியர்கள் அதிருப்தி! - பொதுப்பணித்துறை ஊழியர் சங்கத்தினர்

கன்னியாகுமரியில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த பொதுப்பணித்துறையின் கட்டிட பராமரிப்பு கோட்ட அலுவலகத்தை திடீரென தென்காசிக்கு மாற்றம் செய்த தமிழக அரசுக்கு பொதுப்பணித்துறை ஊழியர் சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

பொதுப்பணித்துறை கண்டனம்
பொதுப்பணித்துறை கண்டனம்

By

Published : Dec 11, 2022, 3:13 PM IST

தமிழக அரசுக்கு பொதுப்பணித்துறை ஊழியர் சங்கத்தினர் கடும் கண்டனம்

கன்னியாகுமரி:பொதுப்பணிதுறையின் உதவி பொறியாளர் கட்டிட பராமரிப்பு பிரிவு கோட்ட அலுவலகம், கன்னியாகுமரியில் பல ஆண்டுகளாக இயங்கி வந்தது. ஒரு கோட்ட அலுவலகம், நான்கு உபகோட்ட அலுவலகம் என இயங்கி வந்த இந்த அலுவலகம் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார மருத்துவமனை, அரசு பள்ளிகள் கட்டிடங்களின் பணிகளை மேற்கொண்டு அதன் பராமரிப்பு பணிகளை செய்து வந்தது.

கடந்த ஏழு ஆண்டுகளில் மாவட்டம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் மட்டும் 70 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டிட பணிகளை இந்த கோட்ட அலுவலகம் செய்துள்ளது. இந்நிலையில் இந்த கட்டிட பிரிவு கோட்ட அலுவலகத்தை, தென்காசி மாவட்டம் ஆலங்குளத்திற்கு இடமாற்றம் செய்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறை ஊழியர்கள் சங்கத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனால் தற்போது அரசு மருத்துவமனைகளில் 50 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வந்த கட்டிடப் பணிகளும் முடங்கி உள்ளது. இதன் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழக அரசு புறக்கணிப்பு செய்து வருவதாக குற்றம் சாட்டிய பொதுப்பணித்துறை ஊழியர் சங்கத்தினர், இடமாற்றம் செய்த கோட்ட அலுவலகத்தை மீண்டும் கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்படுத்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: ரேஷன் அரிசியில் தவழ்ந்த எலி குஞ்சுகள் - பொதுமக்கள் அதிர்ச்சி!

ABOUT THE AUTHOR

...view details