கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி குடிநீர் திட்டப்பணிகளுக்காக பொன்மனை முதல் நாகர்கோவில் வரை சாலையோரங்களில் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்றன. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இந்த குழாய் பதிக்கும் பணிகள் நிறைவடைந்தது.
ஆனால், குழாய் பதிப்பதற்காக சாலைகளில் தோண்டப்பட்ட குழிகள் அவசர கதியில் மூடப்பட்டதாலும் சாலைகள் முறையாக சீரமைக்கப்படாததாலும் இந்தச் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. மேலும், சிறிய மழை பெய்தாலும் சாலைகளில் மழை நீரானது தேங்கி, வாகனப்போக்குவரத்திற்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இதனால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.
சாலையை சீரமைக்கக் கோரி மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்கள் இதனால், ஆத்திரமடைந்த மக்கள் மாநகராட்சி அலுவலர்களைக் கண்டித்து புத்தேரிப் பகுதியில் சாலை மறியல் போராட்டத்திற்காக திரண்டனர். இச்சம்பவம் அறிந்து பேச்சுவார்த்தைக்கு வந்த அலுவலர்கள் இந்த மாத இறுதிக்குள் சாலைகளை சீரமைத்து தருகிறோம் என்று தெரிவித்ததையடுத்து போராட்டத்தில் ஈடுபட வந்த மக்கள் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: உழைப்புக்கு மரியாதை கொடுத்ததெல்லாம் அண்ணா காலத்திலேயே முடிந்துவிட்டது!