வங்ககடலில் உருவாகியுள்ள புரெவி புயல் பாம்பன் - கன்னியாகுமரி இடையே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளியுடன் கனமழை முதல் அதிகனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புரெவி புயல் முன்னெச்சரிக்கை: சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் டிஐஜி ஆய்வு - புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
கன்னியாகுமரி: சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திருநெல்வேலி சரக டிஐஜி நேரில் ஆய்வு செய்தார்.
இந்நிலையில் இன்று (டிசம்பர் 2) சின்னமுட்டம் மீன்பிடித்துறைமுகத்தில் திருநெல்வேலி சரக டிஐஜி பிரவின்குமார் அபினவ் ஆய்வு நடத்தினார். அப்போது சின்னமுட்டம் பங்குதந்தை கிளாசின், மீனவர் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி புயல் தாக்குதலின் போது மாவட்ட நிர்வாகத்தோடு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மாவட்டத்தின் எந்த பகுதியில் புயல் மீட்பு பணி நடைபெற்றாலும் அந்த பணிக்கு 10 விசைப்படகுகளையும், 50 வள்ளங்களையும் தாங்கள் தயார் நிலையில் வைத்திருப்பதாகவும், எந்த நேரத்திலும் நாங்கள் தயாராக இருப்பதாகவும் சின்னமுட்டம் பங்கு சார்பில் டிஐஜி பிரவின்குமார் அபினவிடம் உறுதியளித்தனர்.