கன்னியாகுமரி மாவட்டத்தில், கடந்த தினங்களுக்கு ஏற்பட்ட முன்பு புயல், மழைக் காரணமாக நீர் நிலைகள், விவசாய பயிற்கள், வீடுகள் இடிந்துப் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டன.
இந்நிலையில், மேலகிருஷ்ணன் புதூர், செம்பொன்கரை உள்ளிட்ட பகுதிகளில் தென்னந்தோப்புகளில் புகுந்த தண்ணீரை வெளியேற்றப் பொது பணித்துறை, புத்தன்துறை பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.
ஆனால், மிக அருகில் சங்கு துறை கடல் பகுதி இருந்தும் கூட புத்தன்துறை ஊருக்குள் வாய்க்கால் தோண்டி தண்ணீரை கொண்டு சென்றதால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.