தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

5 ஆண்டுகளாக பழுதடைந்த நிலையிலுள்ள சாலை...! எச்சரித்த 15 கிராம மக்கள் - தடிக்காரன்கோணம்-கீரிப்பாறை செல்லும் சாலை

கன்னியாகுமரி: ஐந்தாண்டுகளாக பழுதடைந்த நிலையில் உள்ள தடிக்காரன்கோணம் பகுதியிலிருந்து கீரிப்பாறைக்குச் செல்லும் சாலையை விரைவில் சீரமைக்காவிட்டால் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என 15 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் எச்சரித்துள்ளனர்.

road damaged

By

Published : Aug 13, 2019, 2:37 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் அழகியபாண்டியபுரத்தில் தடிக்காரன்கோணம் பகுதியிலிருந்து கீரிப்பாறைக்குச் செல்லும் சாலையானது ஐந்து ஆண்டுகளாக பழுதடைந்து உள்ளது. இதில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட ஒக்கி புயலின் பாதிப்பால் சாலை இன்னும் மோசமானது.

இந்தச் சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத் துறை சார்பாக சுமார் ஒரு கோடியே 20 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கியும் வனத் துறை அனுமதி வழங்க மறுத்துவருகிறது. இந்த நிலையில் சில நாட்களாக பெய்த மழையால் குண்டும் குழியுமான இந்தச் சாலையில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.

இதனால் அந்த வழியாகச் சென்றுவரும் பள்ளி மாணவ மாணவியரும், அரசு ரப்பர் தோட்டத்தில் வேலைபார்க்கும் தொழிலாளர்களும் அந்தப் பகுதிகளில் வசித்துவரும் 15-க்கும் மேற்பட்ட கிராம மக்களும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

எனவே போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு அரசும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக பழுதடைந்துள்ள சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். சாலை சீரமைக்கப்படாத பட்சத்தில் அனைத்து கிராம மக்களும் இணைந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details