கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள வெல்லச்சமூடு என்ற பகுதியில் ஓணம் பண்டிகை அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் டிஒய்எப்ஐ (இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்) அமைப்பை சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு காங்கிரஸ் கட்சி தொண்டர்கள்தான் காரணம் என்று கூறப்படுகிறது.
டிஒய்எப்ஐ உறுப்பினர்கள் படுகொலை - குமரி மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் - Member murder
கன்னியாகுமரி: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தொண்டர்களின் சாவுக்கு கண்டனம் தெரிவித்து குமரி மாவட்ட டிஒய்எப்ஐ சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
![டிஒய்எப்ஐ உறுப்பினர்கள் படுகொலை - குமரி மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் protest in Kumari district condemning the killing of DYFI member](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-09:26:04:1599062164-tn-knk-05-dyfi-protest-visual-7203868-02092020175535-0209f-1599049535-473.jpg)
protest in Kumari district condemning the killing of DYFI member
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்ட டிஒய்எப்ஐ சார்பில் கேரளாவில் படுகொலை செய்யப்பட்ட டிஒய்எப்ஐ உறுப்பினர்களின் சாவுக்கு கண்டனம் தெரிவித்தும், இதற்கு காரணமான காங்கிரஸ் கட்சி தொண்டர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் டிஒய்எப்ஐ மாவட்டச் செயலாளர் எட்வின் பிரைட் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதில் காங்கிரஸ் கட்சியை விமர்சித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.