தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக குமரி முழுவதும் 28 இடங்களில் போராட்டம்! - Kanyakumari District News

கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மாவட்டம் முழுவதும் 28 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம்
விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம்

By

Published : Dec 8, 2020, 4:25 PM IST

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக் கேட்டு டெல்லியில் போராட்டம் மேற்கொண்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று (டிச.08) குமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட திமுக, கம்யூனிஸ்ட் காட்சிகளை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதே போன்று மாவட்டம் முழுவதும் 28 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டங்களில் கலந்து கொண்ட 1000க்கும் மேற்பட்டவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

இதையும் படிங்க:சட்டப்பேரவை குலுங்கும்! - பாலகிருஷ்ணன் எச்சரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details