கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பண்ணைவிளை பகுதியில் பள்ளிகூட குடியிருப்புகள், மலர் சந்தை ஆகியவை அமைந்துள்ளன. இப்பகுதியில் தனியார் செல்போன் நிறுவனம் சார்பாக டவர் அமைப்பதற்கான ஆரம்பக் கட்ட பணிகள் தொடங்கப்பட்டன.
ஆனால் இப்பகுதியில் செல்போன் டவர் அமைப்பதால் கதிர்வீச்சு தாக்குதல் ஏற்பட்டு பாதிப்புகள் ஏற்படும் எனப் பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதனிடையே செல்போன் டவர் அமைக்க தோவாளை ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் தனியார் நிறுவனம் அனுமதி கேட்டது. இதனை அறிந்த பொதுமக்கள் செல்போன் டவர் அமைக்க அனுமதி வழங்கக்கூடாது எனக் கூறி தோவாளை ஊராட்சி மன்றத்தை முற்றுகையிட முயன்றனர்.
தனியார் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு ஆனால் பொதுமக்கள் நலனைப் பாதிக்கும் வகையில் செல்போன் டவர் அமைக்க அனுமதி கொடுக்க மாட்டோம் என ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பாக உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது.
இதையும் படிங்க... செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு