கன்னியாகுமரி மாவட்ட பேரூராட்சி துறை இயக்குனர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
குமரியில் பேரூராட்சி துறை இயக்குனர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்! - kanyakumari municipal office
கன்னியாகுமரி: மாவட்ட பேரூராட்சி துறை இயக்குனர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தின் போது, பேரூராட்சித் துறையில் பணியாற்றும் கீழ்நிலை பணியாளர்களான குடிநீர் திட்ட பணியாளர்கள், குடிநீர் திட்ட காவலர் பணி, ஊழியர் உதவியாளர் உள்ளிட்ட பணியாளர்களுக்கு அரசாணை 338 இன் படி தர ஊதியம் ரூபாய் 1900 வழங்கப்பட்டு வந்தது.
கடந்த 15 ஆண்டுகளாக பெற்று வந்த ஊதியத்தை அரசாணைக்கு முரணாக தர ஊதியம் எந்த பெயரில் ரூபாய் 1300 என குறைத்து, 2000 பணியாளர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கெடுக்க துடிக்கும் பேரூராட்சி துறை இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த முடிவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.