தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவிழாவில் தேர் இழுக்க திமுக அமைச்சர்களுக்கு எதிர்ப்பு; பாஜகவினர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் பிரசித்தி பெற்ற வேளிமலை குமாரகோவில் வைகாசி விசாக திருவிழா தேரோட்டத்தில் அமைச்சர் மனோதங்கராஜ், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தேர் இழுக்க பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக அக்கட்சியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

திருவிழாவில் தேர் இழுக்க திமுக அமைச்சர்களுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு
திருவிழாவில் தேர் இழுக்க திமுக அமைச்சர்களுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

By

Published : Jun 11, 2022, 12:26 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கிய கோவில்களில் இன்று வைகாசி விசாக திருவிழா நடைபெற்று வருகிறது. அதில் வரலாற்று சிறப்பு வாய்ந்த தக்கலை அருகே உள்ள வேளிமலை குமார கோவிலில் வைகாசி விசாக திருவிழா தேரோட்டம் இன்று நடைபெற்றது.

தேரோட்டத்தை தொடங்கி வைப்பதற்காக வருகை தந்த அமைச்சர்கள் மனோ தங்கராஜ், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தேர் இழுக்க பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அதிக எண்ணிக்கையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

திருவிழாவில் தேர் இழுக்க திமுக அமைச்சர்களுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

இதுதொடர்பாக பாஜக சார்பில் கலந்து கொண்ட நாகர்கோவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாஜக எம்எல்ஏ எம்.ஆர்.காந்தி உட்பட 100 க்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.

இதையும் படிங்க:கன்னியாகுமரி பகவதி அம்மன் வைகாசி விசாக தேர் திருவிழா!!

ABOUT THE AUTHOR

...view details