கன்னியாகுமரி: சித்தரங்கோடு பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியிலிருந்து இன்று (நவ. 28) காலையில் மாணவர்களை அழைத்து வருவதற்காக பள்ளி வாகனம் சென்றுள்ளது. கஞ்சிமடம் பகுதியில் வாகனம் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிடுவதற்கு பள்ளி வாகன ஓட்டுநர் முயன்றுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக பள்ளி வாகனம் பட்டிணம் கால்வாய்க்குள் கவிழ்ந்து தண்ணீரில் மூழ்கியது. இதனையடுத்து அப்பகுதியினர் விரைந்து செயல்பட்டு வாகனத்திலிருந்து நான்கு பள்ளி மாணவர்களையும், ஓட்டுநர் மற்றும் நடத்துனரையும் மீட்டனர்.