நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் இந்த மாதம் 18ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இதற்கான தேர்தல் பணிகளும், பரப்புரைகளும் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன.
குமரி காங். வேட்பாளர் வசந்தகுமார் ஒரு அரசியல் வியாபாரி: பிரேமலதா சாடல்
கன்னியாகுமரி: காங்கிரஸ் வேட்பாளரும் நாங்குநேரி சட்டப்பேரவை உறுப்பினருமான வசந்தகுமார் ஒரு அரசியல் வியாபாரி என குமரியில் பரப்புரை மேற்கொண்ட தேமுதிக பொருளாளர் பிரேமலதா விமர்சனம் செய்துள்ளார்.
இந்நிலையில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து அஞ்சுகிராமத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் திறந்த வாகனத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், பொன்.ராதாகிருஷ்ணன் அமைச்சராக இருக்கும்போது கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கான வளர்ச்சித் திட்டங்களை கொண்டுவந்தார் எனக்கூறி வாக்கு சேகரித்தார்.
மேலும், பொன்.ராதாகிருஷ்ணனை எதிர்த்துப் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரும் நாங்குநேரி சட்டப்பேரவை உறுப்பினருமான வசந்தகுமார் ஒரு அரசியல் வியாபாரி என பிரேமலதா விமர்சித்துப் பேசினார்.