தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா வார்டிலிருந்து தப்பிச் சென்ற கர்ப்பிணி: குமரியில் பரபரப்பு - கன்னியாகுமரி மாவட்டச் செய்திகள்

கன்னியாகுமரி: ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை கரோனா வார்டிலிருந்து வீட்டுக்குத் தப்பிச் சென்ற எட்டு மாத கர்ப்பிணியை அலுவலர்கள் அறிவுரை கூறி மீண்டும் அழைத்துவந்து மருத்துவமனையில் சேர்த்தனர்.

கரோனா வார்டிலிருந்து தப்பிச் சென்ற கர்ப்பிணி
கரோனா வார்டிலிருந்து தப்பிச் சென்ற கர்ப்பிணி

By

Published : Jun 11, 2021, 1:28 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை மேற்கொண்டுவந்தார். அவருக்கு 28 வயது மனைவியும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். மனைவி தற்போது எட்டு மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்நிலையில் ஓட்டுநர் மூலமாக அவரது மனைவிக்கும் தொற்று பரவியுள்ளது. இதனால் ஓட்டுநர், அவரது மனைவி ஆகிய இருவரும் கடந்த எட்டு நாள்களுக்கு முன்பு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகச் சென்றனர்.

அங்கு சிகிச்சை பெற்றுவந்த கணவன் மனைவி இருவரில் கணவனுக்கு முதலில் உடல்நிலை சரியானது.

அவர் அங்கிருந்து வீட்டிற்குப் புறப்பட்டார். இதை அறிந்த அவரது மனைவி மருத்துவமனையில் யாரிடமும் சொல்லாமல் பாதி சிகிச்சையில் அங்கிருந்து தப்பி ஊருக்கு வந்துவிட்டார்.

இ்தனைத்தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்திலிருந்து கர்ப்பிணியை மீண்டும் சிகிச்சைக்கு அழைத்துவர உத்தரவிடப்பட்டது. இதனைப் தொடர்ந்து அலுவலர்கள் அந்தப் பெண்ணின் வீட்டிற்குச் சென்று அவரை மருத்துவமனைக்கு வரவழைத்தனர்.

ஆனால் அவர் ஆசாரிப்பள்ளம் மருத்துமனைக்குச் செல்வதற்கு மறுத்துவிட்டார். பின்னர், அலுவலர்கள் அந்தப் பெண்ணிடம் தொடர்ந்து பேசி நிலைமையை எடுத்துக்கூறி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

இந்தச் சம்பவத்தால் தென்தாமரைகுளத்தில் பரபரப்பு நிலவியது.

ABOUT THE AUTHOR

...view details