கன்னியாகுமரி மாவட்டத்தில் அகில பாரத இந்து மகாசபா அர்ச்சகர் பேரவை சார்பில் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா தொற்றை ஒழித்திட வேண்டி யாகம் நடைபெற்றது. இந்து மகாசபா மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் வல்லங்குமரன்விளை ஊரில் வைத்து இந்த பிரத்தியங்கிரா யாகம் நடைபெற்றது.
கரோனா தொற்றை ஒழிக்க பிரத்தியங்கிரா யாகம்! - கரோனா பாதிப்பு
கன்னியாகுமரி: உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா தொற்றை ஒழிக்க வேண்டி அகில பாரத இந்து மகாசபா சார்பில் பிரத்தியங்கிரா யாகம் நடைபெற்றது.

Pratyangira pooja
இந்த யாகத்தை அர்ச்சகர் பேரவை சதாசிவம், சங்கர் பூசாரி, நம்பி சுவாமிகள் நடத்தினார்கள். யாகத்தின்போது கரோனா வைரஸை அழிக்க வேண்டி யாக தீயில் மிளகாய் வத்தல் உள்ளிட்ட பொருட்களை தர்ப்பணம் செய்தனர். கரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டறிய விஞ்ஞானிகள், அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து முயற்சி செய்துவரும் சூழலில், இதுபோன்ற மூடநம்பிக்கைகளும் ஒருபுறம் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.