தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஃபேஸ்புக்கில் ஆபாச பதிவு; கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி கைது! - பேஸ்புக்கில் ஆபாச பதிவு

கன்னியாகுமரி: களியக்காவிளை அருகே நவராத்திரி விழா குறித்து முகநூலில் ஆபாசமாக பதிவிட்ட கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகியை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகியை கைது செய்த காவல் துறையினர்

By

Published : Oct 6, 2019, 11:01 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே படந்தாலுமூடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயன் (35). கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகியான இவர் நவராத்திரி விழா, சரஸ்வதி பூஜை ஆகியவை குறித்து முகநூல், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார்.

கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகியை கைது செய்த காவல் துறையினர்
மேலும் தனியார் நகைக் கடையில் கொள்ளையடித்த நபருக்கு, பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா சால்வை போடுவது போன்ற மார்பிங் செய்த புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார். இதனைக் கண்ட பாஜக நிர்வாகிகள் களியக்காவிளை காவல் நிலையத்தில் ஜெயன் மீது புகாரளித்தனர். இதையடுத்து, காவல் துறையினர் ஜெயனை கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் இச்சம்பவம் வைரலாகி வருவதால் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் உள்ள காவல் துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details