கன்னியாகுமரி: தமிழ்நாடு - கேரள எல்லை சோதனைச்சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து அரசு விரந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொன். ராதாகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள கேரளா செல்லும் அணுகுச் சாலையில் அமைந்திருக்கும் சோதனைச்சாவடியில் நேற்றிரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த மார்த்தாண்டத்தைச் சேர்ந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சனை காரில் வந்த இரண்டு பேர், திடீரென மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியால் சுட்டுவிட்டு சுலபமாக தப்பியுள்ளது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.
எஸ்ஐ சுட்டுக் கொலை - சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படம் வெளியீடு!
இந்தச் சம்பவத்தை செய்துவிட்டு தப்பியவர்கள் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் உள்ளதாகவும் தற்போது செய்தி வலம்வருகிறது. நேற்று கேரளாவில் நடந்த முழு கடையடைப்பு, ஆளும் கம்யூனிச அரசால் குடியுரிமைத் திருத்தச் சட்டதிற்கு எதிராக தொடர்ச்சியாக நடைபெற்று வரும் போராட்டங்கள் ஆகியவை இது போன்ற பயங்கரவாதிகள் கொலை ஆயுதங்களுடன் சுற்றித் திரிவதற்கு ஏதுவாக அமைகிறதா என்பதை அரசு கருத்தில்கொள்ள வேண்டும்.