தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை நாடு முழுவதும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. புத்தாடை அணிந்து, மண்பானையில் பொங்கலிட்டு அனைவரும் கோயில்களில் ஒன்றுகூடி தமிழர்களின் பாரம்பரியத்துடன் பொங்கல் வைத்து கொண்டாடிவருகின்றனர்.
இதேபோல, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள கேசவன்புத்தன்துறை மீனவ கிராமத்தில் ஆண்டுதோறும் பொங்கல் கொடியேற்றி ஐந்து நாள்கள் இந்த விழாவினை சிறப்பாகக் கொண்டாடிவருகின்றனர். அந்தவகையில் மாதா தேவாலயத்தில் பொங்கல் கொடி ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டு மாதா கிறிஸ்தவ ஆலயத்தின் வளாகத்தில் பொங்கல் கொடியேற்றப்பட்டது.