தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கனமழை காரணமாக குளங்கள் நிரம்பி உடையும் அபாயம்! - கனமழை காரணமாக குமரியில் உள்ள குளங்கள் நிரம்பி உடையும் அபயம்

கன்னியாகுமரி: கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி உடையும் அபாயத்தில் உள்ளன.

kanyakumari ponds overflowing

By

Published : Oct 22, 2019, 12:26 PM IST

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குளங்கள் நிரம்பி உடையும் நிலையில் உள்ளன. இந்நிலையில் மருங்கூர் பேரூராட்சிக்குட்பட்ட அமராவதி குளம் நேற்று இரவு உடைந்தது.

அதிகாரிகள் தற்காலிகமாக மணல் மூட்டைகளை அடுக்கி உடைப்பை சீரமைத்தனர். எனினும் குளத்தில் தண்ணீர் கசிவு இருந்து வருகிறது. இந்நிலையில் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ ஆஸ்டின் அமராவதி குளத்தை இன்று பார்வையிட்டார். பின்னர் அவர் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு குளத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய அளவு உடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விரைந்து பணிகளை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

மருங்கூர் பேரூராட்சிக்குட்பட்ட அமராவதி குளம்

இதையும் படிக்க: தொடர் மழை எதிரொலி - மூன்று மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details