தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கன்னியாகுமரி இடைத்தேர்தல்: பொன். ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்! - pon rathakrishnan nomination

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பாஜக-அதிமுக கூட்டணி வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

rathakrishnan
ராதாகிருஷ்ணன்

By

Published : Mar 16, 2021, 3:23 PM IST

கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கான பாஜக-அதிமுக கூட்டணி வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் இன்று(மார்ச்.16), நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " கடந்த 1967ஆம் ஆண்டு கடல் பாசியில் அல்வா செய்து தரப்படும் என்று திமுக ஆட்சியில் வாக்குறுதி அளித்துவிட்டு பொதுமக்களுக்கு அல்வா கொடுத்தார்கள். ஆனால் தற்போது அதிமுக ஆட்சியில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

கன்னியாகுமரியில் மக்களின் விருப்பத்தின் அடிப்படையில் ஏற்கனவே தொடங்கப்பட்டு நிலுவையில் இருக்கும் நான்குவழிச் சாலை, இரட்டை ரயில் பாதை திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும். ஏற்கனவே அறிவித்த இ.எஸ்.ஐ மருத்துவமனையும், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையை பன்னோக்கு மருத்துவமனையாக மாற்றும் திட்டமும் அமலுக்குக் கொண்டு வரப்படும்.

பொன் ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்

ரப்பர் பூங்கா திட்டங்கள் கொண்டுவரப்படும். மார்த்தாண்டம் மேம்பாலம் ஆடுகிறது என்றார்கள். காங்கிரஸ், திமுகவினர் கண்ணுக்கு மட்டுமே ஆடுவது தெரிந்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும் பாலம் ஆடுவது நின்றுவிட்டது. குமரியில் துறைமுகம் குறித்து இதுவரை எந்தவிதமான பிரச்னையும் இல்லாதபோது, தேர்தல் தேதி அறிவித்தவுடன் மட்டும் இந்தப் பிரச்னை எப்படி வந்தது என்று தெரியவில்லை" என்றார்.

இதையும் படிங்க:ரயில்வேயை தனியார்மயமாக்க திட்டமில்லை - பியூஷ் கோயல் உறுதி

ABOUT THE AUTHOR

...view details