தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘வில்சன் கொலை வழக்கு - 6 எம்எல்ஏக்களும் பதவி விலக வேண்டும்’ - பொன்னார்

கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் உள்ள 6 எம்எல்ஏக்களும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சனின் கொலைக்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

‘வில்சன் கொலை வழக்கு - 6 எம்எல்ஏக்களும் பதவி விலக வேண்டும்’
‘வில்சன் கொலை வழக்கு - 6 எம்எல்ஏக்களும் பதவி விலக வேண்டும்’

By

Published : Jan 23, 2020, 5:07 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட பாஜக அலுவலகத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள் கூட்டம் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டம் நிறைவடைந்ததும் பத்திரிகையாளர்களை சந்தித்த பொன். ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு அமைச்சர் ஜெயக்குமார் என்னைப் பற்றி சில விஷயங்கள் பேசியுள்ளார்கள். இவர்கள் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு சான்றிதழ் தர வேண்டியது இல்லை. கூட்டணி தர்மம் இருப்பதால்தான் மௌனமாக இருக்கிறேன். நேரில் பார்க்கும்போது அமைச்சர் ஜெயக்குமாருடன் சில விஷயங்களை பேசுவுள்ளேன் என்றார்.

ரஜினியின் சர்ச்சை பேச்சு குறித்த கேள்விக்கு, நடிகர் ரஜினிகாந்த் எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். தற்போது ரஜினியை எதிர்த்தால்தான் அரசியல் செய்ய முடியும் என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள். திமுகவினருக்கு வேறு அரசியல் தெரியாது. ரஜினி இரண்டு பத்திரிகைகளை சுட்டிக்காட்டி பேசினார். அரசியல் பேச பிழைப்பு இல்லாததால் ரஜினி குறித்து திமுக பேசுகிறார்கள். அவர்களுக்கு வேறு வேலை தெரியாது என ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மேலும் அவர், தமிழகத்தின் தென்பகுதிகளில் மணல்கடத்தலில் யார் ஈடுபட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு அவரை கண்ணாடியில் பார்த்து கூறியிருப்பார் என்று நினைக்கிறேன். நான் எனது உறவினர்கள் உட்பட அனைவரது சொத்துக் கணக்கினையும் கொடுக்க தயார். அப்பாவு அவர்களது சொத்துக் கணக்கினை காட்ட வேண்டும். எந்த விசாரணைக்கும் நான் தயாராக உள்ளேன்.

வில்சன் கொலைக்கும், கொலையை மறைக்க முற்படுபவர்களுக்கும் பங்குள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 எம்எல்ஏ.க்கள் மற்றும் எம்.பி., ஆகியோர் காவல்துறை அதிகாரி கொல்லப்பட்டத்தற்கு வெட்கப்பட வேண்டும், பதவியை துறந்து விட்டு போக வேண்டும். இவர்கள் தீவிரவாதிகளை பார்த்து பயப்படுகிறார்கள். அச்சம் வந்தவர்கள் எதற்காக பதவி வகிக்க வேண்டும். காங்கிரஸ் கூட்டணியினர் CAA, NRC குறித்து இல்லாத பயத்தை தூண்டியதன் காரணமாக வில்சன் கொலை செய்யப்பட்டுள்ளார்.

‘வில்சன் கொலை வழக்கு - 6 எம்எல்ஏக்களும் பதவி விலக வேண்டும்’

வில்சன் கொலைக்கு பின் இங்குள்ள மத தலைவர்கள் தங்கள் அருகதையை இழந்து நிற்கிறார்கள். இவர்களது செயல் வில்சனின் செத்துப்போன பிணத்தை தோண்டி எடுத்து சித்திரவதை செய்வதற்கு சமமானது என்று கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details