தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஈரோட்டில் நடந்தது ஒரு தேர்தலே இல்லை' - பொன். ராதாகிருஷ்ணன் விமர்சனம்! - ஈரோடு தேர்தல் விவரங்கள்

ஈரோட்டில் நடந்தது ஒரு தேர்தலே இல்லை. சந்தையில் நடக்கும் ஏலத்தை விட மக்களை கூறு போட்டு திமுகவினர் விற்றுவிட்டனர் என பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 2, 2023, 8:27 PM IST

செய்தியாளர்களைச் சந்தித்த பொன். ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மூன்று மாநிலங்களில் பாஜகவின் அமோக வெற்றி பிரதமரின் ஆளுமைக்கு மக்கள் கொடுத்த பரிசு” எனக் கூறினார்.

மேலும், “வரும் பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடியின் ஆளுமையை மக்கள் ஏற்றுக்கொண்டதாக இந்த தேர்தல் வெற்றி அமைந்துள்ளது. ஈரோட்டில் நடந்த தேர்தல் அது தேர்தலே இல்லை, சந்தையில் ஏலம் விடுவதை பார்த்திருக்கிறோம். அந்த ஏலத்தை விட ஈரோட்டில் மக்களை கூறு போட்டு விற்றுவிட்டார்கள்.

திருமங்கலம் ஃபார்முலா என்றாலே திமுக தான். அந்த திருமங்கலம் ஃபார்முலாவே ஈரோட்டில் இப்போது விஞ்ஞானபூர்வமாக ஜனநாயகத்தை இப்படியும் கேவலப்படுத்த முடியும் என்பதை நிரூபித்துள்ளார்கள். பணம் பாதாளம் வரை பாயும் என சொல்வார்கள். ஆனால் இந்த ஈரோடு தேர்தலில் பாதாளத்தையும் தாண்டி பணத்தை பாய வைத்து தேர்தலை திமுக சந்தித்துள்ளது” எனக் குற்றம்சாட்டினார்.

இதையும் படிங்க:ஈரோடு இடைத்தேர்தல்: வெற்றி வாகை சூடும் காங்கிரஸ், களைகட்டிய காங்கிரஸ் மாநில தலைமை அலுவலகம்

ABOUT THE AUTHOR

...view details