தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘தினகரன் பொய் சொல்லி தேர்தலை சந்திப்பவர்’ - பொன்னார் காட்டம் - பாஜக வேட்பாளர்

கன்னியாகுமரி: அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பொய் சொல்லி தேர்தலை சந்திப்பவர் என கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

பொன்.ராதாகிருஷ்ணன்

By

Published : Apr 11, 2019, 11:06 PM IST

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியின் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், மாவட்டம் முழுவதும் தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இதனிடையே, தக்கலை பகுதியில் இன்று பரப்புரை மேற்கொண்ட பொன்னார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில்,

"தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், கன்னியாகுமரி தொகுதியில் அமமுக சார்பில் பலவீனமான வேட்பாளரை நிறுத்திடக்கோரி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் பேச விரும்புவதாகவும், அக்கட்சியின் நிர்வாகி கருப்பு முருகானந்தம் தினகரனுடைய உதவியாளர் ஜனாவை போனில் தொடர்பு கொண்டதாகவும் கூறியிருந்தார். இந்த விவகாரத்தில் பேசியதாகக் கூறப்படும் கருப்பு முருகானந்தத்திற்கும், தினகரனுக்கும் இடையே பல காலமாக நெருங்கிய நட்புள்ளது. வேட்பாளர் தேர்வு குறித்து என்னை கேட்டிருந்தால், பலமான வேட்பாளரையே தேர்வு செய்ய சொல்லியிருப்பேன். ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் செய்வது போன்று, பத்தாயிரம் பொய் சொல்லி தேர்தலை சந்திக்கிறார் தினகரன்" என கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details