கன்னியாகுமரி: திமுக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்பில் தாய் மொழியாம் தமிழை கொண்டு வரவும், ஆட்சி மொழியில் தமிழை கொண்டு வரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், திமுக அரசு மொழி அரசியல் செய்வதாக தமிழ்நாடு அரசை கண்டித்தும் அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பொன் ராதாகிருஷ்ணன் கூறுகையில், "தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நடத்தும் இவர்கள் 1999 ஆம் ஆண்டு அன்றைய திமுக மத்திய அமைச்சர்கள், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லியில் சென்று தனி வகுப்புகளில் இந்தி பாடம் படித்துக் கொண்டிருந்தார்கள். நானும் படிப்பதற்காக அங்கே சென்றபோது இவர்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். வெளியில் சொல்லி விடாதீர்கள் என சொன்னார்கள்.