கன்னியாகுமரி: கோட்டார் காவல் நிலையம் சார்பாக ஏழை மக்களுக்கு கரோனா நிவாரணம் வழங்கப்பட்டது.
கரோனா பெருந்தொற்று மக்களிடையே பரவாமல் தடுக்கும் விதமாக, தற்போது ஊரடங்கு போடப்பட்டு, தனிமனித இடைவெளியுடன் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இச்சூழலில் தினக்கூலி வேலைகளுக்குச் சென்று குடும்பத்தை வழி நடத்தியவர்கள் பலரும் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு சிரமப்பட்டு வருகின்றனர்.
இதைக் கருத்திற்கொண்டு அரசுடன் இணைந்தும், தன்னார்வலர்கள் தனியாகவும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் காவல் நிலைய காவல் துறையினர் சார்பில் ஏழைகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
காவல் துறையினர் ஏற்பாடு செய்த செழுமையான நிவாரண வழங்கல் விழா! அதன்படி, கோட்டார் காவல்நிலையத்திற்கு எல்லைக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ஏழை மக்களுக்கு, நாகர்கோவில் நகர காவல் துணை கண்காணிப்பாளர் ஜவஹர் தலைமையில் காய்கறிகள், அரிசி, குழந்தைகளுக்கான தின்பண்டங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தனிமனித இடைவெளியுடன் வழங்கினர்.