தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கேமராக்கள் பொருத்திய வாகனம் மூலம் கண்காணிப்பு - காவல்துறையினர் கண்காணிப்பு

கன்னியாகுமரி: குற்ற செயல்களை தடுக்கும் வகையில் முக்கிய இடங்களில் கேமராக்கள் பொருத்திய நவீன ரோந்து வாகனம் மூலம் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேமராக்கள் பொருத்திய வாகனம் மூலம் கண்காணிப்பு
கேமராக்கள் பொருத்திய வாகனம் மூலம் கண்காணிப்பு

By

Published : Jun 30, 2021, 8:19 PM IST

கரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு தற்போது போருந்துகள் இயங்க தொடங்கி உள்ளன. இதனால் மாவட்டத்தின் முக்கிய இடங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முக்கிய சந்திப்புகளில், கேமராக்கள் பொருத்திய ரோந்து வாகனத்தில் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ரோந்து வாகனத்தில் ஐந்து கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும். கேமராக்கள் 360 டிகிரி சுழன்று படம் பிடிக்கும் தன்மை உடையவை. எனவே அலுவலர்கள் தங்களது அலுவலகத்தில் இருந்தபடியே இந்த கேமராக்கள் மூலம் முக்கிய இடங்களை கண்காணித்து வருகின்றனர்.

அதேபோல் இந்த வாகனத்தில் பெரிய ஒளிரும் திரை அமைக்கப்பட்டுள்ளது. மாலை நேரங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வாகனத்தை நிறுத்தி திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் காவல்துறையினர் ஒளிபரப்பி வருகின்றனர்.

இதையும் படிங்க: இருசக்கர வாகனத்தில் இருந்த ரூ. 3 லட்சம் கொள்ளை

ABOUT THE AUTHOR

...view details