கன்னியாகுமரி மாவட்டம் நித்திரைவிளை அருகே நடைக்காவு பகுதியை சேர்ந்தவர் அஜின் குமார் (27). இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையின் ஆயுதப்படை பிரிவில் 9வது பட்டாலியன் பிரிவில் பணியில் சேர்ந்தார். இவருக்கு கோதையாறு மின் உற்பத்தி நிலையத்தில் பாதுகாப்பு பணி வழங்கப்பட்டு, அங்கு பணிபுரிந்து வந்தார்.
குமரி: பணியில் இருந்த காவலர் தற்கொலை! - அஜின் குமார்
கன்னியாகுமரி: மின் உற்பத்தி நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இன்று காலை கோதையார் மின் உற்பத்தி நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த அவர் பாதுகாப்பு பணிக்காக அவருக்கு வழங்கப்பட்ட இயந்திர துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், இந்த தற்கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.முதற்கட்ட விசாரணையில் 'பணி ஒதுக்கீடு செய்வதில் அவருக்கு பாரபட்சம் காட்டியதாகவும், உயர் அதிகாரியின் டார்ச்சர் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டது' தெரியவந்துள்ளது.