தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, அனைத்து கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
குமரியில் பதற்றமான வாக்குச்சாவடிகள் பகுதிகளில் காவல் துறையினர் அணிவகுப்பு! - kanniyakumari
கன்னியாகுமரி: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கன்னியாகுமரியில் பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ள இடங்களில் பாதுகாப்பிற்காக காவல் துறையினரின் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் சூடுபிடித்து உள்ளது. பாஜக சார்பில் போட்டியிடும் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வசந்தகுமார் ஆகியோர் தனது கூட்டணி கட்சித் தொண்டர்களுடன் மாவட்டம் முழுவதும் சூறாவளி பரப்புரை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில், மாவட்டம் முழுவதும் வாக்குச்சாவடி அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள இடங்களை கண்டறிந்து அந்த இடங்களில் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அதன்படி குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, அஞ்சுகிராமம், மயிலாடி, தோப்பூர் உள்பட குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காவல் துறையினர் இன்று கொடி அணிவகுப்பு நிகழ்ச்சிகளை நடத்தினர்.