கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியைச் சேர்ந்தவர் சுயம்பு (50). இவர் தண்டவாளத்தில் அடிபட்டு இறந்து கிடப்பதாக, ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்க்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சடலத்தை கைப்பற்றி விசாரனை மேற்கொள்வதற்காக ஆரல்வாய்மொழி உதவி ஆய்வாளர் மகேஷ்பாபு, சிறப்பு பிரிவு காவலர் பிலிப் ஆகியோர் சம்பவ இடத்திற்க்கு சென்றார்கள்.
அப்பொழுது அவ்வழியாக அனந்தபுரி விரைவு ரயில் வந்து கொண்டு இருந்தது. சடலத்தின் அருகே ரயில் வரும் பொழுது ரயிலில் அடிப்பட்டு இறந்து கிடந்தவர் மீது ரயிலின் முகப்பு வெளிச்சம் பட்டது. அப்போது இறந்த நபரின் உடலில் அசைவுகள் தெரிந்ததை உதவி ஆய்வாளர் கவனித்தார். உடனடியாக அவ்வழியாக வந்த அடுத்த ரயில் அவரை மோதுவதற்க்கு முன்பு ஓடிச் சென்று அடிபட்ட நபரை காப்பாற்றினார்.