கன்னியாகுமரி:கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களில் நேற்று (டிச.25) இரவிலும் பலர் ஈடுபட்டு வந்தனர். இதனால் சாலைகளில் நள்ளிரவிலும் வாகன போக்குவரத்து அதிகளவில் காணப்பட்டது. இந்நிலையில், கன்னியாகுமரி அருகே குண்டல் பகுதியில் வளைவான சாலையில் சாலையோரமாக இருந்த வீட்டின் மீது சொகுசு கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் வாகனம் மட்டுமே சேதமாகியுள்ளது. விபத்து குறித்து கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில் சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவ்வீட்டின் எதிரே உள்ள தனியார் விடுதி ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் விபத்து குறித்த காட்சிகள் பதிவாகியிருந்தன.