குமரி மாவட்டம் ராமாபுரம் அடுத்த தண்டநாயகன் கோணம் பகுதியைச் சேர்ந்த ஜாய்ஸ் மேரி (39) என்பவர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு ஒன்று கொடுத்துள்ளார். அதில், எனது கணவர் அந்தோணி மீது சில குற்ற வழக்குகள் உண்டு. மேலும் பல வழக்குகளில் இருந்து நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவர் மீது நிலுவையில் உள்ள வழக்குகளில் நீதிமன்றத்தில் தவறாமல் ஆஜராகி வருகிறார்.
இந்த நிலையில் சமுதாயத்தில் தான் திருந்தி வாழ ஆசைப்பட்டு குற்றச்செயல்களை விடுத்து அவர் ஒதுங்கி வாழ்ந்து வந்தார். இருப்பினும் காவல்துறையின் புள்ளிவிவரத்தை வேண்டி அவர் மீது பொய் வழக்குகள் பதிவு செய்து வந்தனர்.
மேலும், கால் உடைந்து சிகிச்சையில் இருந்த எனது கணவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைத்தனர். பின்னர் நீதிமன்றத்தின் மூலம் எட்டு மாதத்திற்குப் பிறகு அவர் வெளியே வந்தார். இந்நிலையில் அவருக்கு தனிப்படை காவல் துறையினர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தனர்.
கடந்த 21ஆம் தேதி தனிப்படை காவல் துறையினர் எங்கள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து மகளின் படிப்பிற்காக நகை அடமானம் வைத்து பெற்ற ரூ.1லட்சம் மற்றும் அதற்கான ரசீது, வீட்டில் நிறுத்தியிருந்த ஸ்கார்பியோ காரையும் எடுத்துச் சென்றனர். ஆனால் இதுவரை என் கணவர் மீது எந்தவித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் பல்வேறு வகைகளில் எங்களையும் எங்கள் குடும்பத்தாரையும் அச்சுறுத்தியும் மிரட்டியும் வருகின்றனர். இதனால் எங்களுக்கு உயிருக்கும் உடமைக்கும் ஆபத்து ஏற்படலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே நீங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் கஞ்சா வியாபாரிக்கு போலீஸ் தொல்லை: மனைவி புகார்! - Kanniyakumari District news
கன்னியாகுமரி: ராமாபுரம் அடுத்த தண்டநாயகன் கோணம் பகுதியை சேர்ந்த முன்னாள் கஞ்சா வியாபாரிக்கு காவல் துறையினர் தொல்லை கொடுத்து வருவதாக அவரது மனைவி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
theft
அந்தோணி மீது மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனை, ஆள் கடத்தல், வெளிநாட்டு விமான பணிப் பெண்ணை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்தது உட்பட 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.