கரோனா வைரஸ் தாக்கத்தை தடுக்க 144 தடை உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் காவல் துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர். அதை மீறியும் பல இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் சுற்றி வருகின்றனர். இதனைத் தடுக்க கன்னியாகுமரி மாவட்ட காவல் துறையினர் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக தக்கலை சரக டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையில் காவல் துறையினர் தமிழ்நாடு, கேரள எல்லைப் பகுதியான களியக்காவிளை, குழித்துறை, மார்த்தாண்டம் போன்ற பகுதிகளில் சாலையில் தேவையின்றி சுற்றி திரியும் இளைஞர்கள், பொதுமக்களை தடுத்து நிறுத்தி கரோனா வைரஸ் விழிப்புணர்வு தேர்வு நடத்தி வருகின்றனர்.
அந்தத் தேர்வில் கேட்கப்பட்ட சில கேள்விகள்,
கரோனா வைரஸ் முதலில் பரவிய நாடு எது?
கரோனா வைரஸின் காதலி பெயர் என்ன?