தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரடங்கு உத்தரவு மீறல்: ஒரே நாளில் 226 வழக்குகள் பதிவு - corona virus effect

கன்னியாகுமரி: ஊரடங்கு உத்தரவை மீறிய காரணத்தால், ஒரே நாளில் 226 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

ஊரடங்கு உத்தரவு மீறல்: ஒரே நாளில் 226 வழக்குகள் பதிவு
ஊரடங்கு உத்தரவு மீறல்: ஒரே நாளில் 226 வழக்குகள் பதிவு

By

Published : Apr 7, 2020, 6:55 PM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், மக்கள் அநாவசியமாக வெளிவர அனுமதி மறுக்கப்பட்டது.

இதனைக் கண்காணிக்க கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் அனைத்து சாலைகளிலிலும் காவல் துறையினர் குவிக்கப்பட்டு, வாகனத் தணிக்கையும் நடைபெற்றுவருகிறது.

ஊரடங்கு உத்தரவு மீறல்: ஒரே நாளில் 226 வழக்குகள் பதிவு

இதைப்போல், கோட்டார், வடசேரி, பார்வதிபுரம் உள்பட மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளில் தீவிர சோதனைகளில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனைகளில், ஒரே நாளில் ஊரடங்கு தடை உத்தரவை மீறியதாக 226 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 169 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த பின்னர், 2 ஆயிரத்து 253 வழக்குகள் பதிவாகியுள்ளன. ஆயிரத்து 782 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:கரோனா பணிகளை மேற்கொள்ள தன்னார்வலர்கள் முன்வரவேண்டும்

ABOUT THE AUTHOR

...view details