தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கு - தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஒருவர் கைது - குற்றச் செய்திகள்

கன்னியாகுமரியில் தொழிலதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தலைமறைவாக இருந்தவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்தனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 14, 2022, 5:42 PM IST

கன்னியாகுமரி: மண்டைக்காடு அருகே கருமங்கூடல் பகுதியில் வசித்து வருபவர் கல்யாணசுந்தரம். தொழிலதிபரான இவர் வீட்டில் கடந்த 27ஆம் தேதி அதிகாலையில் அடையாளம் தெரியாத இரண்டு பேர் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச் சென்றனர்.

இதில், இவருடைய வீட்டு கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன, கார் எரிந்து சேதமடைந்தன. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மண்டைக்காடு காவல் துறையினர், விசாரணை செய்தனர். மேலும், பத்து தனிப்படைகள் அமைக்கபட்டு குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய குளச்சல் பகுதியைச் சேர்ந்த முஸ்ஸா மில் என்ற ஷமில் கான் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் காவல் துறையினர், கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:சிறுமியை திருமணம் செய்த இளைஞர் போக்சோவில் கைது

ABOUT THE AUTHOR

...view details