கன்னியாகுமரி:திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாகதேவி பகுதியைச் சேர்ந்தவர் முகமது உசேன் (29). இவரது மனைவி ரெஜினா பானு (26). இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். முகமது உசேன் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் வேலைக்காக வந்த நிலையில், கடந்த 6 மாதங்களாக புன்னை நகர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி அதே பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், ரெஜினா பானு வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்ததாகவும் அவரை முகமது உசேன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார். இது குறித்து நேசமணிநகர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டபோது, மனைவி ரெஜினா பானுவை கணவர் முகமது உசேன் கொலை செய்து நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் முகமது உசேனை கைது செய்தனர். அவர் காவல் துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது,
“எனக்கும் ரெஜினா பானுவுக்கும் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு நாங்கள் குமரி மாவட்டத்தில் வேலைக்கு வந்தோம். தற்போது நான் புன்னைநகர் பகுதியில் தங்கி ஹோட்டல் ஒன்றில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறேன். எனக்கும் எனது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.