திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியைச் சேர்ந்தவர் சிவா (39). இவர் வேலை தேடி கன்னியாகுமரி மாவட்டம் வந்தார். இந்நிலையில், இன்று (செப்.4) அதிகாலையில் சிவா தோவாளை அருகேயுள்ள பேருந்து நிறுத்தத்தில் படுத்திருந்தார்.
அப்போது கஞ்சா போதையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், சிவா மீது மிளகாய் பொடியை தூவிவிட்டு அருவாளால் தலை, கை, கால்களில் வெட்டினர். மேலும், சிவாவிடம் இருந்த இரண்டாயிரம் ரூபாய் பணத்தையும் பறித்துச் சென்றனர். இதையடுத்து, செண்பராமன்புதூர் - பூதப்பாண்டி சாலையில் கோவையைச் சேர்ந்த ரஜேஷ்வரன் என்பவர் நடந்து வந்தார். அவரையும் தாக்கி விட்டு சென்றனர்.