தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நகையை ஆட்டையைப் போட்ட பலே ஆசாமிகள் - சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை! - மார்த்தாண்டம்

கன்னியாகுமரி மாவட்டதில் தொடர் கொள்ளை சம்பவம் அதிகரித்து வரும் நிலையில், நகை வாங்குவதுபோல் நடித்து ஒன்றேகால் சவரன் நகையை திருடிய பலே ஆசாமிகளின் சிசிடிவி காட்சிகள் பதிவானதைத் தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நகையை ஆட்டையை போட்ட பலே ஆசாமிகள்! சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை..
நகையை ஆட்டையை போட்ட பலே ஆசாமிகள்! சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை..

By

Published : May 18, 2023, 12:14 PM IST

நகையை ஆட்டையைப் போட்ட பலே ஆசாமிகள் - சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை!

கன்னியாகுமரி:நகை வாங்குவதுபோல் நடித்து ஒன்றேகால் சவரன் நகையைத் திருடிய பலே ஆசாமிகள் குறித்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தில், நகை வாங்குவதுபோல் நடித்து ஒன்றேகால் சவரன் நகையைத் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரு தினங்களுக்கு முன்பு, நாகர்கோவில் அருகே கணபதிபுரம் பகுதியில் நிதி நிறுவனம் மற்றும் வெளிநாட்டிற்கு பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதி செய்யும் தொழிலை நடத்தி வரும் முருகன் என்பவர், குடும்பத்துடன் வெளியூர் சென்ற போது நிதி நிறுவனம் மற்றும் வீட்டில் உள்ள பீரோவில் இருந்த 100 சவரன் தங்க நகைகள் மற்றும் 6 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டது.

இந்த பரபரப்பு அடங்கும் முன்பு இதே மாவட்டத்தில் மற்றொரு கொள்ளைச் சம்பவம் நடைபெற்று உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் காப்புகாடு பகுதியைச் சேர்ந்தவர், விஜூ. இவர் மார்த்தாண்டம் மற்றும் குன்னத்தூர் பகுதிகளில் நகைக்கடை நடத்தி வருகிறார். விஜூ இரண்டு கடைகளை நடத்தி வருவதால், இரண்டு நாட்களுக்கு ஒருமுறை நகைகளை சரி பார்ப்பது வழக்கம். அதை போல் நகைக்கடையில் உள்ள நகைகளை சரிபார்த்த போது, சுமார் 10 கிராம் நகை குறைவாக இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார் விஜூ.

எனவே, இது குறித்து கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிளை ஆய்வு செய்தார். அப்போது, நேற்று மாலை இரண்டு நபர்கள் கடைக்கு வந்ததும் தொடர்ந்து நகை வாங்குவது போல் நடித்து நகையைத் திருடிச் செல்வதும் தெரியவந்தது. இதே போல் குன்னதூரிலுள்ள விஜூவின் மற்றொரு நகைக்கடையிலும் மிகசிறிய நகையை வாங்கி அங்கேயும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் விஜூ புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு மேற்கொண்ட மார்த்தாண்டம் காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அதை தொடர்ந்து கைரேகை நிபுணர்களும் வரவழைக்கபட்டு, ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

பட்டப்பகலில் பரபரப்பான மார்த்தாண்டம் ஜங்சன் பகுதியில், நகை வாங்குவது போல் நடித்து நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தினம் தினம் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏதாவது ஒரு பகுதியில் கொள்ளை சம்பவம் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், இரவு நேரங்களில் மட்டுமே நடைபெற்று வந்த கொள்ளை சம்பவம், தற்போது பட்டப் பகலிலும் நடந்து வருகிறது. வீடுகளில் கொள்ளை,சிறுகடைகளில் கொள்ளை, வர்த்தக நிறுவனங்களில் கொள்ளை, தனியாக நடந்து செல்பவர்களிடம் வழிபறி போன்ற சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளது.

இதற்கு காரணம் காவல்துறையின் அலட்சியம் தான் எனவும், சிசிடிவி கேமராக்கள் இல்லை என்றால் காவல்துறையினர் ஒரு குற்றவாளியை கூட கைது செய்ய இயலாத நிலை ஏற்பட்டிருக்கும் என்றும் கூறினர். மேலும், தற்போது அவர்களுக்கு சிசிடிவி மட்டுமே உதவி புரிந்து வருவதால், காவல்துறையினர் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும் எனவும் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் கூறினர். மேலும், குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என்பதும் பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க:நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் பலி!

ABOUT THE AUTHOR

...view details