தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஹெச். வசந்தகுமார் மறைவு: நெருங்கிய நண்பர் சீதாராமன் வேதனை! - கவிஞர் சீதாராமன்

வசந்தகுமார் இறப்பு என்பது அகஸ்தீஸ்வரம் மட்டுமல்லாது தமிழ்நாட்டிற்கே பேரிழப்பாகும். அவர் கடின உழைப்பால் உயர்ந்து, பல நெருக்கடியில் இருந்தாலும், ஏழை மாணவர்கள் கல்வி பயில ஊக்கத்தொகை வழங்கி வந்தார் என்று அவரின் நெருங்கிய நண்பரான கவிஞர் சீதாராமன் தெரிவித்துள்ளார்.

கவிஞர் சீதாராமன்
கவிஞர் சீதாராமன்

By

Published : Aug 30, 2020, 8:07 PM IST

கன்னியாகுமரி: மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் மறைவு குறித்து அவரது நெருங்கிய நண்பரான கவிஞர் சீதாராமன் உருக்கமாக பேட்டியளித்துள்ளார்.

கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் ஆகஸ்ட் 28ஆம் தேதி மறைந்தார். அவரது உடல் சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகஸ்தீஸ்வரத்தில் இன்று (ஆகஸ்ட் 30) நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு அரசியல் கட்சியினர், பொதுமக்கள், தொழிலதிபர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இச்சூழலில் அவரது நெருங்கிய நண்பர் கவிஞர் சீதாராமன் கூறும்போது, “எனது நெருங்கிய நண்பர் வசந்தகுமார் இறப்பு என்பது அகஸ்தீஸ்வரம் மட்டுமல்லாது தமிழ்நாட்டிற்கே பேரிழப்பாகும். அவர் கடின உழைப்பால் உயர்ந்து, பல நெருக்கடியில் இருந்தாலும், ஏழை மாணவர்கள் கல்வி பயில ஊக்கத்தொகை வழங்கி வந்தார்.

மேலும், நலிவுற்ற ஏழைகளுக்கு மாதம்தோறும் உதவித்தொகை வழங்கி வந்தார். அவரது இழப்பு ஈடு இணை செய்ய முடியாதது” என்று உருக்கத்துடன் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details