தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பகவதியம்மன் கோவிலில் மோடியின் சகோதரர் வழிபாடு! - PM Modi's brother worship at Bhagwati Amman temple

கன்னியாகுமரி: பிரதமர் மோடியின் சகோதரர் பங்கஜ் மோடி, பகவதியம்மன் கோயிலில் இன்று சாமி தரிசனம் செய்தார்.

pm-modis-brother
pm-modis-brother

By

Published : Dec 20, 2019, 5:21 PM IST

பிரதமர் நரேந்திரமோடியின் சகோதரர் பங்கஜ் மோடி தனது உறவினர்கள் 53 பேருடன் ஆன்மீக பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி ராமேஸ்வரத்திலிருந்து நேற்று கன்னியாகுமரி வந்தடைந்த அவர் இன்று அதிகாலை கடற்கரையில் சூரிய உதயத்தை பார்த்துவிட்டு முக்கடல் சங்கமத்தில் தனது கால்களை நனைத்தார்.

அதனைத் தொடர்ந்து, பிரசித்திப்பெற்ற கன்னியாகுமரி பகவதியம்மன் திருக்கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது அவருடன் பாஜக கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் உடனிருந்தனர். பின்னர் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்திற்குச் செல்ல இருந்தநிலையில் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால் அங்கு செல்லவில்லை.

பகவதியம்மன் கோவிலில் பிரதமர் மோடியின் சகோதரர் வழிபாடு

பின்னர் காந்தி மண்டபம் சென்று தியானத்தில் ஈடுபட்டார். காமராஜர் மணி மண்டபம் மற்றும் கடற்கரையில் நின்று விவேகானந்தர் மண்டபத்தை பார்த்து ரசித்தனர். இன்று மாலை இங்கிருந்து புறப்பட்டு குஜராத் செல்கின்றனர்.

இதையும் படிங்க: பிரதமரின் ‘தூய்மை இந்தியா’ நனவா? தொலைதூர கனவா?

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details