இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் சந்திக்கும் நிகழ்வு காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், மாமல்லபுரத்தில் இருக்கும் மோடியின் புகைப்படத்தை அவதூறாகச் சித்தரித்து இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளதாக பாஜக பிரமுகர் நாஞ்சில்ராஜா என்பவர் வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
ஃபேஸ்புக்கில் மோடியை அவதூறாகச் சித்தரித்த இளைஞர் கைது - The Prime Minister in the face of slander
கன்னியாகுமரி: மாமல்லபுரத்திற்கு வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை அவதூறாகச் சித்திரித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்ட இளைஞரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இளைஞர் கைது
புகாரின் பேரில் வடசேரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் மேக்காமண்டபம் பகுதியைச் சேர்ந்த ஜெபின் சார்லஸ் என்ற இளைஞர் இப்புகைப்படத்தை பதிவேற்றம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரைக் கைது செய்த காவல் துறையினர், இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.