தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குமரியில் பேரூராட்சி ஊழியர்களுக்கான திடக்கழிவு மேலாண்மை பயிலரங்கம் - திடக்கழிவு மேலாண்மை பயிலரங்கம்

கன்னியாகுமரி: மாவட்ட பேரூராட்சி ஊழியகளுக்கான நெகிழி மாற்றுப் பொருள், திடக்கழிவு மேலாண்மை குறித்த இரண்டு நாள் விழிப்புணர்வுக் கண்காட்சி, பயிலரங்கம் தொடங்கியது.

பேரூராட்சி

By

Published : Jun 12, 2019, 1:33 PM IST

இந்தக் கண்காட்சியை மாவட்ட பேரூராட்சி உதவி இயக்குநர் கண்ணன் திறந்துவைத்து பேசுகையில், கன்னியாகுமரில் உள்ள 55 பேரூராட்சிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கான திடக்கழிவு மேலாண்மை குறித்து பயிற்சி இந்தக் கண்காட்சியில் அளிக்கப்படும். அதேபோல் பொதுமக்களிடம் பெறப்படும் குப்பைகளில் தரம் பிரிப்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இந்தப் பயிற்சியின் மூலம் மாவட்டத்தில் சுத்தம், சுகாதாரப் பணிகள் பாதுகாக்கப்படும் என்றார்.

திடக்கழிவு மேலாண்மை பயிலரங்கம்

மேலும், தமிழ்நாடு முழுவதும் நெகிழி மாற்று பொருட்கள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது. அதனை ஏராளமான பொதுமக்கள், மாணவ, மாணவியர் பார்வையிட்டனர். கரும்புச் சக்கையிலிருந்து தயாரிக்கப்படும் டம்ளர் தட்டு போன்ற அன்றாட உபயோகப் பொருட்கள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது காண்போரை கவர்ந்தது. இந்தப் பயிலரங்கத்தில் கன்னியாகுமரி மாவட்ட பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள், பரப்புரையாளர்கள் கலந்துகொண்டனர்

ABOUT THE AUTHOR

...view details