கன்னியாகுமரி: குலசேகரம், வெள்ளிமலை, சித்திரங்கோடு, பேச்சிப்பாறை, குமாரபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ரப்பர் தோட்டங்களில் ஊடுபயிராக ஆயிரக்கணக்கான ஏக்கரில் அன்னாசிப்பழம் பயிர் செய்யப்படுகிறது.
இந்த அன்னாசி பழங்கள் கரோனா ஊரடங்கு காரணமாக ஏற்றுமதி இல்லாததால், வீணாக அழுகிப்போகும் நிலை உருவானது. இதனால் விவசாயிகளுக்கு கடும் இழப்பு ஏற்பட்டது.