தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருந்தாளுநர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே பணியாற்றுவதால், நோயாளிகள் உட்பட மருந்தாளுநர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதை கண்டித்து, கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மருந்தாளுநர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மருந்தாளுநர்களின் காலி பணியிடங்களை நிரப்பக்கோரி போராட்டம்! - pharmacist protest to fill the 700 vacanies
நாகர்கோவில்: தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 700க்கும் மேற்பட்ட மருந்தாளுநர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வலியுறுத்தி மருந்தாளுநர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 700க்கும் மேற்பட்ட மருந்தாளுநர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தாளுநர் பணி நேரம் காலை 9 முதல் மாலை 4 வரை என்ற அரசாணையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மேலும் சேலம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் மருந்தாளுநர்கள் மாநிலம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.